இனி LPG சிலண்டர் முன்பதிவு செய்ய ஒரே ஒரு missed Call கொடுத்தால் போதும்..!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் கேஸ் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய மிஸ்டு கால் கொடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி 01 ஜனவரி அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இண்டேன் வாடிக்கையாளர்கள் புதிய எரிவாயு சிலிண்டருக்கு 8454955555 என்ற எண்ணிற்கு Missed Call கொடுத்தால் போதும், எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு வழங்கப்படும். மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் புவனேஸ்வரில் ஒரு நிகழ்ச்சியின் போது இந்த வசதியை அறிமுகம் செய்தார்.
மிஸ்டுகால் வசதி சிலிண்டர் முன்பதிவை எளிதாக்கும். சாதாரண அழைப்புகளின் போது ஏற்படும் கட்டண செல்வுகள் வாடிக்கையாளர்களுக்கு குறையும். புதிய வசதி தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஏற்ற வசதியாக இருக்கும். இது நேரத்தையும் மிச்சப்படுத்தும். புவனேஸ்வரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
அறிமுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சிலிண்டரை சில மணி நேரங்களுக்குள் வழங்க முயற்சிக்குமாறு எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களுக்கு பிரதான் அறிவுறுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில், உலகளாவிய ஆக்டேன் 100 பெட்ரோலின் இந்தியன் ஆயில் வேரியண்ட் ஆன XP 100 இன் இரண்டாம் கட்டத்தையும் பிரதான் தொடங்கி வைத்தார்.