ஜனவரி 1 முதல் LPG விலை உயர்வு? மக்களே தயாராகுங்கள்.. பல மாற்றங்கள் வரவுள்ளது!
2025 புத்தாண்டு முதல் நாடு முழுவதும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் உங்கள் அன்றாட வாழ்வில் எவ்வாறு பாதிக்கும்? என்னென்ன மாற்றங்கள் அரசு மேற்கொள்ள இருக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
ஜனவரி 1, 2025 முதல் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைபெற உள்ளன. இது சாதாரண தனிநபர்களின் நிதிநிலையையும் பாதிக்கும். அதாவது எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, கார் விலை உயர்வு, ஓய்வூதிய விதிகளில் மாற்றம், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், யூபிஐ 123 பே (UPI 123Pay) விதிகள் மற்றும் எஃப்டி விதிகள் மாற்றம் என பல மாற்றங்கள் நிகழவுள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பளத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதன் அடைப்படையில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஜனவரி 1 ஆம் தேதி மாற்றி அமைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய், டாடா, மாருதி சுசுகி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி போன்ற நிறுவனங்கள் வரும் ஆண்டில் தங்கள் வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்த உள்ளன. டிசம்பரில் ஒரு காரின் விலை ரூ.7 லட்சமாக இருந்தது என்றால், ஜனவரியில் அது தோராயமாக ரூ.7.21 லட்சமாக உயரும். எனவே அடுத்த ஆண்டு முதல் நீங்கள் கார் வங்க நினைத்தால் உங்கள் பாக்கெட்டில் இருந்து அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் 2025 ஜனவரி 1 முதல் அமல் செய்யப்படும். அதாவது இனி பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். யாராவது மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், அவர் கூடுதல் சந்தா செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீபேட் ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள் ஒரு நல்ல செய்தியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. அதாவது 2025 ஜனவரி 1 முதல், UPI 123Pay சேவையின் கீழ் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான அதிகபட்ச வரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயரும்.
ஜனவரி 1, 2025 முதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த மாற்றம் ஓய்வூதியதாரர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தும். அதாவது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை நாடு முழுவதும் உள்ள எந்தவொரு வங்கி கிளையிலும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு எந்தவித சரிபார்ப்பு (Verification) தேவையிருக்காது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது 2025 ஜனவரி 1 முதல், புதிய விதிமுறைகளின்படி, நிறுவனங்கள் திரவ சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் வைப்புத்தொகைகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.