புதிய எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பிற்கான விலை உயர்வு...முழு விவரம் இதோ!
புதிய சிலிண்டர்களின் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (ஓஎம்சி) அதிகப்படுத்தியுள்ளதால், தற்போது புதிய சமையல் எரிவாயு இணைப்பு செய்ய விரும்புபவர்கள் அதிக பணம் கொடுத்து இணைப்பை பெறவேண்டும். இந்த புதிய கட்டணங்கள் ஜூன் 16, 2022 முதல் அமலுக்கு வருகின்றன
ஒரு இணைப்புக்கு ரூ.1450 என்று வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் புதிய எரிவாயு இணைப்புக்கு ரூ.2200 வசூலிக்கப்படும்.
14.2 கிலோ எடையுள்ள இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுக்கும் வாடிக்கையாளர்கள், எரிவாயு இணைப்பு எடுக்கும் போது, இணைப்புக் கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் 5 கிலோ சிலிண்டர்களுக்கான செக்யூரிட்டி பணமும் உயர்த்தப்பட்டுள்ளது, இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.800க்கு பதிலாக ரூ.1150 செலுத்த வேண்டும்.