லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?

Sun, 20 Oct 2024-11:37 am,

கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான 'லப்பர் பந்து' படம் கோலிவுட்டில் இந்த ஆண்டு வெற்றிகரமான படமாக மாறி உள்ளது. கம்மி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து படம் ஆரம்பத்தில் அக்டோபர் 18ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் ஒத்திவைக்கப்பட்டது. 

 

இது தொடர்பாக சிம்ப்ளி சவுத் X தளத்தில், "லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வருவதால், அதன் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை நாங்கள் ஒத்திவைக்கிறோம். புதிய ஸ்ட்ரீமிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தது.

 

இந்நிலையில் லப்பர் பந்து படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை. 

 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இடையே இணைப்பு ஏற்பட இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை. செப்டம்பர் 20ம் தேதி அன்று உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. 

 

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாண், தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link