வக்ர சனியால் கோடீஸ்வர யோகம்.. அதிர்ஷ்ட வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்
சனி தேவின் வக்ர இயக்கம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. அதன்படி சனி பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை எப்படிப் பட்ட பலனைத் தரப்போகிறார் என்பதை பார்ப்போம். ஏனென்றால் 2 மாதங்களுக்குப் பிறகு சனிதேவர் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார்.
மேஷம்: சனிபகவானின் தாக்கத்தால் கோபப்படுவீர்கள். கோபத்தைத் தவிர்க்கவும், தூண்டுதலில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்: சனி தேவரின் அருளால் முழு நம்பிக்கையுடனும், வன பலத்துடனும் இருப்பீர்கள். தொழிலுக்காக கடின உழைப்பு சாதகமாக அமையும். மனம் மகிழ்ச்சியுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
மிதுனம்: சனிபகவானின் தாக்கத்தால் மனம் அலைக்கழிக்கப்படும். உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள், அப்படி செய்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். தொழில் நிமித்தமான பயணங்கள் சாத்தியமாகும்.
கடகம்: லாபம் பெருகும், நண்பரின் உதவி கிடைக்கும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவதோடு, வேலை வாய்ப்பும் கிடைக்கும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
கன்னி: உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு இருக்கும். பணியிட மாற்றம் சாத்தியமாகும். பண பலன்களை பெறுவீர்கள்.
துலாம்: தந்தையிடமிருந்து சொத்துக்களைப் பெறலாம். தந்தை பண உதவி செய்வார். வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். தாயின் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்: நண்பரின் உதவியால் வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கல்விப் பணிகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
தனுசு: தேவையற்ற சச்சரவுகளையும் கோபத்தையும் தவிர்க்கவும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.நம்பிக்கை குறைவாக இருக்கும்.
மகரம்: கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மன உளைச்சல் ஏற்படலாம். சிந்தித்து நிதானமாக முடிவு எடுங்கள்.
கும்பம்: தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படும். நம்பிக்கை குறைவாக இருக்கும்.
மீனம்: அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.