Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வெறும் 20 லட்சத்துக்கு இடம்பிடித்திருக்கும் வீரர் மயங்க் அகர்வால். அவர் சிஎஸ்கே, டெல்லி அணிகள் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லக்னோ அணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியது.
அவர் அபாரமாக பந்துவீசி வருகிறார். ஒரு ஓவருக்கு 3 பந்துகளை 150 கிலோ மீட்டருக்குமேல் வீசி அசரடித்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துல்லியமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் ஆர்சிபி போட்டியிலும் அபாரமாக பந்துவீசினார்.
மயங்க் யாதவின் துல்லியமான பந்துவீச்சில் ஆர்சிபி அணி திணறியது. விராட் கோலி, மேக்ஸ்வெல் எல்லோரும் ரன் அடிக்க திணறினர். 4 ஓவர்கள் வீசிய மயங்க் யாதவ், வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மேக்ஸ்வெல் மற்றும் கேம்ரூன் கிரீன் உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இருக்கும் மயங்க் யாதவ் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை 150 கிலோ மீட்டருக்கும் மேல் வீசிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 157 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு பந்தை வீசி ஆர்சிபி அணியை அசரடித்தார்.
139 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து தான் மிக குறைந்த வேகத்தில் மயங்க் யாதவ் வீசிய பந்துவீச்சாகும். ஐபிஎல் போட்டியில் முதல் இரண்டு போட்டிகளிலும் முத்திரை பதித்திருப்பதால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.