பங்குச் சந்தையை சூறையாடிய மோசடி மன்னன்! லக்கி பாஸ்கர் எனும் ஹர்ஷத் மேத்தா!!
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படம் அனைவரது மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். இதில் வரும் கதைகள் ஹர்ஷத் மேத்தா கதை போன்று எடுக்கப்பட்டிருக்கும்.
பங்குச் சந்தையில் ஹர்ஷத் மேத்தா செய்த தில்லாலங்கடி வேலைகள் மற்றும் ஊழல்கள் அனைத்தும் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று இந்த லக்கி பாஸ்கர் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த படம் பிரபலமடைய முழுக் காரணம் இதன் கதை மட்டுமே.
ஹர்ஷத் மேத்தா ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் இவர் 1980 முதல் 90களில் இந்தியாவின் பங்குச்சந்தையில் இவருக்குப் பட்டை பெயர் “ சிட்டி கிங்” என்று அனைவராலும் அழைக்கப்படுவார்.
ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையில் எதிர்பார்க்காத சாதனைகள் பலவற்றை நேரடியாக அனுபவிக்கத் தொடங்கினார். இது இவரை உச்சக்கட்ட அளவிற்குக் கொண்டுசெல்ல முயற்சி செய்தது.
ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையில் செய்த மிகப்பெரிய மோசடியை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த பிரபல சுசேதா தலால் என்ற பத்திரிக்கையாளர் இவரின் வர்த்தக மோசடியை ஆராய்ந்து உண்மையை கண்டுபிடித்து ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியளிக்கச் செய்தது.
ஹர்ஷ்த் மேத்தா மோசடி செயல் என்னவென்றால் இவர் தன்னிடம் இருக்கும் பங்கு பணத்தை வைத்துக்கொண்டு அவற்றைச் சந்தையில் 40 சதவீதம் உயர்த்தி காட்டி வந்ததது தெரியவந்தது. இவரின் மோசடி செயல் அறியாமல் பலரும் இவர் பங்குகளை வாங்க முன் வந்தனர்.
ஹர்ஷத் மேத்தா தனது பங்குகள் அனைத்தும் எக்கச்சக்க இலாபத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இந்த பணங்கள் அனைத்தும் வங்கிகளில் போலி உத்தரவாதங்களை (BR) தயார் செய்து, அந்த பணத்தைத் திருட்டுத் தனமாக வங்கியில் தீய வழியில் பெற்றுவந்துள்ளார். இவரின் துணிச்சலான செயல்களுக்கு உடந்தையாக இருந்தது முக்கிய கூட்டாளிகள் வங்கியாளர்கள் என்பது தெரிய வந்தது.
மோசடி மன்னன் செய்த வேலைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு 1992யில் வசமாக காவல்துறையிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று சிறை வளாகத்தில் 47வயதில் உயிரிழந்தார்.