இந்திய அணியின் Luck Charm லார்ட் தாக்கூரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
ஷர்துல் தாக்கூர் இன்று (அக். 16) தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் தற்போது நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக இருக்கிறார்.
ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur), 2021இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 31 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேகமாக டெஸ்டில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 1982இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கபில் தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஓடிஐ கிரிக்கெட்டில் ஷர்துல் தாக்கூர் இதுவரை மூன்று முறை, தலா ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் 2006இல் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற முக்கிய போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து, அதே போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடர்ந்து மூன்று அரைசதங்களை அடித்த வெளிநாட்டு பேட்டர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டோனால்ட் பிராட்மேனுடன் ஷர்துல் தாக்கூர் பகிர்ந்து கொண்டார். இது இந்தாண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் படைக்கப்பட்டது.
இவர் கடந்த பிப். 27ஆம் தேதி மும்பையில் தனது நீண்ட நாள் காதலி மிதாலி பருல்கரை (Mittali Parulkar) கரம் பிடித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தனிப்பட்ட முறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஷர்துல் தாக்கூர் தற்போதும் இந்திய அணியின் (Indian Team) ஆல்-ரவுண்டராக மூன்று பார்மட்களிலும் விளையாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ.25 கோடி என தெரிவிக்கப்படுகிறது. இவர் ரூ.10.75 கோடியில் கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் ஒப்பந்தத்தில் உள்ளார்.