செவ்வாய் பெயர்ச்சி: இவர்களின் தலைவிதி மாறியது, 12 ராசிகளின் முழு ராசிபலன் இதோ
மேஷம்: நீங்கள் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வணிக கூட்டாளருடன் ஒரு புதிய திட்டத்தை விவாதிப்பீர்கள், இந்த விவாதத்தின் முடிவுகள் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம். வணிகத்தில் துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்: இந்த பெயர்ச்சி உங்கள் துணிச்சலை பாதிக்கும். உற்சாகத்தில் சுயநினைவை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம், அதை நீங்கள் தவிர்க்க வேண்டும். கோபம், பேரார்வம், வீண் விரயம் போன்ற விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.
மிதுனம்: நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆற்றல் மிக்கவராகவும், ஆர்வமுள்ளவராகவும் இருப்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.இந்த நேரத்தில் புதிதாக ஏதாவது நல்ல விஷயம் நடக்க வாய்ப்பு உள்ளது. அர்த்தமுள்ள மற்றும் சுவாரஸ்யமான உறவுகளும் உருவாகலாம். இந்த நேரத்தில், ஆக்ரோஷத்தை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.
கடகம்: முதல் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற கோபம், மோகம் ஆகியவை இந்த நேரத்தில் உங்களுக்கு இருக்கும். உங்கள் இயல்பிற்குள் வன்மத்தை நுழைய விடாதீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. உங்கள் நண்பர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
சிம்மம்: தேவையற்ற செலவுகள் கூடும். செவ்வாய்-சுக்கிரன் ஒன்றாக இருப்பதால் பொருள் சார்ந்த இன்பங்களுக்காக அதிகம் செலவிடுவீர்கள். வேலையை முடிக்க வழக்கத்தை விட அதிகமாக அலைச்சல் பட வேண்டியிருக்கும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் நிதித் துறைகள் குறிப்பாக சவாலானதாக இருக்கும்.
கன்னி: தடைபட்ட வேலைகள் முடிந்து பொருளாதார ரீதியாக பலம் பெறுவீர்கள்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். ஆனால் சூழ்நிலையை சமாளித்து விடுவீர்கள். காதல் வாழ்க்கையில் டென்ஷன் வரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.
துலாம்: இந்த நேரத்தில் உங்கள் தொழில் வளம் பெறும். நல்ல பண வரவு இருக்கும், ஆனால் உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்திற்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். இப்போது பதவி உயர்வும் பெற வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவீர்கள், இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
விருச்சிகம்: தொலைதூரப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாறுவதற்கு முயற்சி செய்வார்கள், முயற்சிகள் வெற்றியடையும் வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையுடன் இனிமையான பொழுதை செலவிடுவீர்கள்.
தனுசு: வாகனங்களைப் பயன்படுத்தும்போது வேகத்தைக் கவனியுங்கள், இந்த நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் உறவில் கசப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வார்த்தைகளை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் பற்றாக்குறை ஏற்படும், இதனால் மனம் தளர வேண்டாம்.
மகரம்: உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிலை சிறப்பாக இருக்கும், கடின உழைப்பால் நல்ல பலன்களையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் வணிகம் மற்றும் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மற்றும் முன்முயற்சியால், தடைபட்ட பணிகள் முடிவடையும்.
கும்பம்: இந்த நேரத்தில் தொழிலை விரிவுபடுத்த கடுமையாக உழைப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் மன உறுதி குறையும். அதிக கவனத்துடன் படிப்பில் ஈடுபட வேண்டும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் அல்லது வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம்.
மீனம்: இந்த நேரத்தில் வளர்ச்சி மற்றும் லாபத்திற்கான ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். நேர்மறை உணர்வும் மேலோங்கும். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைவதால், புதிய உறவுகள், புதிய யோசனைகள் மற்றும் புதிய கூட்டாளிகள் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம். உங்கள் நிதி நிலை மேம்படும்.