மாசி பௌர்ணமி... மகிழ்ச்சியில் திளைக்கும் 5 ராசிகள்!
மாசி மாத பௌர்ணமி நாளான இன்று சனிகிழமையும் சேர்ந்து இருப்பதால் தன் முக்கியத்துவம் கூடுகிறது இந்த நல்ல யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் பலனடையும் ராசிகளை தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசியினருக்கு, நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிம்மதி பிறக்கும். நிதி ஆணையம் மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.
கன்னி ராசிகளுக்கு பௌர்ணமி நன்னாளில் மனதை மகிழ்விக்கும் செய்திகள் வந்து சேரும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.
துலாம் ராசியினருக்கு உடல்நல பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதியான வாழ்வு பிறக்கும். திருமண முயற்சி தொடர்பாக நல்ல செய்திகள் வந்து சேரும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
மகர ராசியினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்ப ராசியினருக்கு தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதிநிலை வலுவாக இருப்பதால் மனதிற்கு மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.