மகர சங்கராந்தி 2025: தை மாத நவ பஞ்சம யோகம்... ஜாக்பாட் பலன்களை பெறும் 4 ராசிகள்
தை மாதம்: சூரியன் பெயர்ச்சி 2025 கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், மாதத்திற்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகிறார். சூரியன் பெயர்ச்சியில் தமிழ் மாதம் பிறக்கிறது. ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அப்போது தை மாதம் பிறக்கும்.
மகர சங்கராந்தி: சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பதால், தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தை மாத பிறப்பு மகர சங்கராந்தியாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், செவ்வாய்க்கு உகந்த மங்கள வாரத்தில், பூச நட்சத்திரமும் சேருவது, மிகவும் மங்களகரமான சேர்க்கை என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்
தை மாத பலன்கள்: செவ்வாயும் பூச நட்சத்திரமும் கூடிய, சுபயோக சுப தினமாக திகழும் மகர சங்கராந்தி, சில ராசிகளுக்கு பல வகையில் அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கிறது. மேலும் தை மாதத்தில் உருவாகும் நவ பஞ்சம யோகம் காரணமாக ஜாக்பாட் பலன்களை பெறும் அதிர்ஷ்டசாலிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி: தை மாதத்தில் உருவாகும் நவபஞ்ச யோகத்தால், விருச்சிக ராசியினருக்கு எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு ராசி: தை மாதத்தில் உருவாகும் நவபஞ்சம் யோகத்தால், தனுசு ராசியினரின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மகர ராசி: தை மாதத்தில் உருவாகும் நவ பஞ்சமயோகத்தால், மகர ராசியினருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த முடிவையும் சிறப்பாக எடுப்பீர்கள். பொறுப்புகளை பலர் பாராட்டும் வகையில் நிறைவேற்றுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மீன ராசி: தை மாதத்தில் உருவாகும் நவ பஞ்சமயோகம் காரணமாக மீன ராசியினரின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்களின் பெயர் ஆதரவு கிடைக்கும். நீண்ட கால இலக்குகளை சிறப்பாக நிர்ணயிப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் நிம்மதி நீடித்திருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.