ரிஷபத்தில் சுக்கிரன்! மாளவ்ய ராஜயோகத்தை அனுபவிக்கும் ‘சில’ ராசிகள்!

Thu, 06 Apr 2023-7:29 am,

சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்  மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது பல ராசி அறிகுறிகளுக்கு சுப பலன்களைத் தரும். சுக்கிரன் சஞ்சாரத்தின் போது குறிப்பிட்ட சிஅல் ராசிகள் அபரிமிதமான பலன்களை பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். அந்த ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்  ரிஷப ராசிகளுக்கு அபரிமிதமான பலன் தரும். இந்த ராசியின் லக்ன வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். உங்களுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும். மனைவியுடன் உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். சுக்கிரனின் சஞ்சாரம் நிதி நிலையை மேம்படுத்தும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்கு பத்தாவது வீட்டில் மாளவ்ய ராஜ யோகம் உருவாகிறது. வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வேலை கிடைக்கும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சம்பள உயர்வு இருக்கும். வசதிகள் பெருகும். சொத்து, வாகனம் வாங்க நினைத்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கு நான்காம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இது வசதிகள் மற்றும் வாகனங்களின் காரணியாக கருதப்படுகிறது. வாகனம் வாங்க இது உகந்த நேரம். வீடு, மனை, தளபாடங்கள் போன்றவற்றை வாங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்த காலகட்டத்தில் நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link