குட்டி உடையில் கெட்டியாக கிளாமர் காட்டும் பிரியா வாரியர்! வைரல் போட்டோஸ்..
ஒரே நாளில் உலகளவில் ட்ரெண்டான நடிகைதான் பிரியா பிரகாஷ் வாரியர். அவர் வைரலான ஆண்டு 2018. வைரலான படம் எது தெரியுமா?
‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் வரும் ஒரு காட்சிதான் பிரியா வாரியரை பெரிதும் வைரலாக்கியது. 2018ஆம் ஆண்டில் அதிகம் கூகுளில் தேடப்பட்ட நபர்களுள் இவரும் ஒருவர்.
கண் அடிக்கும் வீடியோவிற்கு வைரலானது மட்டுமன்றி, இவரை பலரும் க்ரஷ் லிஸ்டிலும் வைத்தனர். 2019ஆம் ஆண்டு அக்காட்சி இடம் பெற்றிருந்த ஒரு அடார் லவ் படம் வெளியானது. ஆனால், இப்படம் பெரிய வெற்றியையோ நல்ல விமர்சனத்தையோ பெறவில்லை.
அந்த படத்திற்கு பிறகு பிரியாவிற்கு வெவ்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில், இஷ்க்: நாட் அ லவ் ஸ்டோரி மற்றும் ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
பிரியா வாரியருக்கு இந்தி திரையுலகிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டில் அவர் இனி நடிக்க இருக்கும் மூன்றுமே இந்தி மொழி படங்கள்தான்.
பிரியா, தமிழ் மொழியில் இன்னும் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
பிரியா வாரியர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அதில், பச்சை வண்ண உடையணிந்து கிளாமர் காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.