ஆடி செவ்வாயில் உமையன்னைக்கு விரதம்! மங்கலங்களை மங்காமல் தரும் மங்கள கெளரி விரதம்...
ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமைகளில் அனுசரிக்கப்படும் மங்கள கௌரி விரதம் இருப்பவர்களுக்கு உமையொரு பாகனின் அருள் அபரிதமாக இருக்கும்.
அன்னை பார்வதியை மனம் குளிரச் செய்யும் மங்கலமான கெளரி விரதத்தை திருமணமான பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்து சகல செளபாக்கியங்களையும் பெறுவார்கள்
திருமணமாகாத பெண்கள், மங்கள கெளரி விரதத்தைக் கடைபிடித்தால் மனம்போல மாங்கல்யம் வாய்க்கும்
கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குழந்தைகளின் மகிழ்ச்சி, குடும்பத்தில் நிம்மதி என குடும்ப நலனுக்காக பெண்கள் மங்கள கௌரி விரதம் அனுசரிக்கின்றனர்
அன்னை பார்வதியின் எட்டாவது ரூபமான மஹா கெளரி அன்னைக்காக வைக்கப்படும் விரதம் ஆடி செவ்வாயில் மங்கள கெளரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது
ஆடி செவ்வாயில் அன்னை பார்வதிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், அரிசியும் வெல்லமும் நெய்யும் கலந்து பலகாரமாக சுவைப்பது போல, குடும்பத்தில் அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை
இனிப்பான மாவில் விளக்கு போட்டு அன்னைக்கு தீபம் காட்டுவது குடும்பத்தில் ஒளியேற்றும்
சிவனின் மனைவியான பார்வதி அன்னையின் பல வடிவங்களையும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறோம். அந்த அடிப்படையில் கெளரியை கொண்டாடும் விரதம் மங்கள கெளரி விரதம் ஆகும்
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது