கிரிக்கெட் உலகில் மற்றொரு விவாகரத்தா?.. பரவும் தகவல்கள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே மற்றும் அவரது மனைவி அஷ்ரிதா ஷெட்டி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஜோடி தனங்களது சமூக வலைத்தள கணக்கில் இருந்து அவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களை நீக்கிவிட்டனர்.
அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் NH4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூனு களவானிகளும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மனீஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி சமீபத்தில் ஒன்றாக பொதுவெளியில் ஒன்றாக காணப்படவில்லை. இது அவர்களது திருமண வாழ்வு குறித்து கூடுதல் வதந்திகளுக்கு வழிவகுக்கிறது.
மனீஷ் பாண்டே - அஷ்ரிதா ஷெட்டி இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வதந்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா, யுஸ்வேர்ந்திர சாஹலை தொடர்ந்து மனீஷ் பாண்டேவின் திருமண வதந்திகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ அவர்களது திருமண வதந்திகளுக்கு மத்தியில் மெளனம் கலைத்தனர். அதேபோல் மனீஷ் பாண்டே மெளனம் கலைப்பாரா என்று எதிர்ப்பார்க்கின்றனர்.