மன்றாடி மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்! த்ரிஷா கொடுத்த மாஸ் ரிப்ளை! என்ன தெரியுமா?

Fri, 24 Nov 2023-4:13 pm,

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆபாசமாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

நடிகர் மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் குறித்த நேர்காணலில் கலந்து கொண்ட அவர், தனக்கு முந்தைய படங்களில் நடித்தது போல நாயகியை துரத்தி கர்ப்பழிக்கும் சீன் இருக்கும் என நினைத்ததாகவும் அப்படி எதுவும் லியோ படத்தில் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார். த்ரிஷாவை கண்ணில் கூட காட்டாமல் விமானத்திலேயே ஏற்றி கொண்டு போய் விட்டதாக தெரிவித்திருந்தார். 

மன்சூர் அலிகான் கொடுத்திருந்த இந்த பேட்டி, தமிழ் திரையுலகில் பெரும் பூகம்பத்தினை கிளப்பியது. நடிகை த்ரிஷா இதற்கு தனது சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இவருக்கு லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். 

தான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து விட்டது என்பதை உணர்ந்த பின்பு, மன்சூர் அலிகான், தான் பேசியதில் என்ன தவறு உள்ளது என்பது போல ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், த்ரிஷாவைப்பற்றி உயர்வாக பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாச கருத்து தெரிவித்த இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது. அவர்கள், தாமாக முன்வந்து வழக்கு தொடுத்து உடனடியாக மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டனர். இதற்கு த்ரிஷாவும் நன்றி தெரிவித்திருந்தார். 

இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே போன நிலையில், மன்சூர் அலிகான் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது என்னை கேட்காமல் எனக்கு கண்டனம் தெரிவ்த்த லோகேஷ் கனகராஜ் மீது தான் கோபமாக இருப்பதாகவும் இனி அவர் படத்தில் நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறினார். 

தான் மன்னிப்பு கேட்கும் சாதியல்ல என்று நேற்று தெரிவித்த மன்சூர் அலிகான், இன்று, “என் சக கதாநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்து விடு..” என்று மன்னிப்பு கேட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “எதற்கு இத்தனை தேவையற்ற வாய்சவடால்?” என்று வேடிக்கையாக கேள்வி கேட்டுள்ளனர். 

மன்சூர் அலிகானின் மன்னிப்புக்கு நடிகை த்ரிஷாவும் பதில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வீகமானது..” என்று தெரிவித்துள்ளனர். மன்சூர் அலிகானை மன்னித்ததற்காக பல ரசிகர்கள் த்ரிஷாவை பாராட்டி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link