மார்க் ஆண்டனி ஓடிடி ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?
மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர்.
மார்க் ஆண்டனி படம், காமெடி-சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் படம் உருவாகியுள்ளது. படத்தில் சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்துள்ளனர்.
மார்க் ஆண்டனி படத்தில் ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தனர்.
விஷால், நீண்ட வருடங்களுக்கு பின்னர் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் ஹீரோக்களின் லிஸ்டில் இணைந்துள்ளார்.
உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் 100 கோடி வரை கலெக்ட் செய்துள்ளது. இப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது.
மார்க் ஆண்டனி படம் ஓடிடியில் வரும் இந்த மாதம் (அக்டோபர்) வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம். இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறியோர் ஓடிடியில் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.