IPL And MS Dhoni: 5 இறுதிப் போட்டிகள், 5 வெற்றிகள், 5 மறக்க முடியாத ஐபிஎல் தருணங்கள்

Tue, 30 May 2023-10:59 am,

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸின் சூப்பர் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவத்தை வரையறுக்கும் மறக்கமுடியாத தருணங்கள் 

ஐபிஎல் 2010 இறுதிப் போட்டி பொல்லார்டுக்கு எதிராக ஹேடனை நேராக மிட்-ஆஃபில் வைப்பது முக்கியமான முடிவு என்று அனைவராலும் தோனி பாராட்டபப்ட்டார். இந்த முடிவு, CSK, முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற வழிவகுத்தது.

உலகக் கோப்பை 2011 இறுதிப் போட்டி தோனியின், 5 மற்றும் அவரது அற்புதமான இன்னிங்ஸ் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்தது

ஐபிஎல் 2011 இறுதிப் போட்டி கெய்லுக்கு எதிராக அஸ்வினுடன் இணைந்து தோனியின் தந்திரோபாய நகர்வு, RCBயை தோல்வியைத் தழுவச்செய்து, CSK க்கு பட்டத்தை உறுதி செய்தது.

சாம்பியன்ஸ் டிராபி 2013 இறுதிப் போட்டி 18வது ஓவரில் இஷாந்த் சர்மாவை நம்பி தோனி எடுத்த துணிச்சலான முடிவு பலனளித்து, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

டி20 உலகக் கோப்பை 2007 இறுதிப் போட்டி கடைசி ஓவரில் ஜோகிந்தர் ஷர்மாவை நம்பி தோனியின் துணிச்சலான நடவடிக்கை இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற வழிவகுத்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link