Haj Pilgrimage: மெக்காவில் கொரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பான ஹஜ் யாத்திரை

Tue, 20 Jul 2021-9:06 pm,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் இஸ்லாமியர்களின் புனிதப் பயணங்களில் ஒன்றான ஹஜ் யாத்திரை தொடங்கியது. ஹஜ்ஜிற்காக புனித நகரமான மக்காவுக்கு சனிக்கிழமை முதல் யாத்ரீகர்கள் வரத் தொடங்கினார்கள்

(புகைப்படம்: AFP)

வழக்கமாக உடலை மூடி ஆடை அணிந்திருக்கும் இஸ்லாமியர்கள், தற்போது கூடுதலாக முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தங்கள் புனிதக் கடமையை ஆற்றுகின்றனர்.

(புகைப்படம்: AFP)

யாத்ரீகர்களின் சுகாதாரத்தைப் பராமரிப்பதற்காக அதிகாரிகள் பல சுகாதார வசதிகள், மொபைல் கிளினிக்குகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் அமைத்துள்ளனர்.  

(புகைப்படம்: AFP)

ஐந்து நாள் சடங்கின் போது கொரோனா தொற்று எந்த யாத்ரீகர்களுக்கும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த ஆண்டும் பல முன்னேற்பாடுகல் செய்யப்பட்டுள்ளன. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 60,000 உள்நாட்டினர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அனுமதி கொடுத்துள்ளது.  

(புகைப்படம்: AFP)

இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்க விரும்புபவர்களை குலுக்கல் முறையில் அரசு தேர்வு செய்தது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த ஆண்டும் புனித யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.   (புகைப்படம்: AFP)

யாத்ரீகர்கள் பேருந்துகள் மூலம் மக்காவின் கிராண்ட் மசூதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கு யாத்ரீகர்கள் "தவாஃப்" எனப்படும் காபாவை வலம் வருகின்றனர்.  

கடுமையான கோடை வெப்பத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பலர் குடைகளை எடுத்துச் சென்றனர்.

(புகைப்படம்: AFP)

"மூன்று மணி நேரத்தில் 6,000 பேர் தவாஃப் செய்ய உள்ளே நுழைகிறார்கள்" என்று ஹஜ் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹிஷாம் அல் சயீத் தெரிவித்தார். "ஒரு குழு வெளியேறிய பிறகு, அங்கு சுத்தீகரிப்பு செய்யப்பட்டு பிறகு அடுத்தக் குழு உள்ளே அனுப்பப்படுகிறது."

(புகைப்படம்: AFP)

2019 ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்ற உலகின் மிகப்பெரிய வருடாந்திர மதக் கூட்டங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த புனிதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது முஸ்லிம்களின் பிரதான விருப்பக் கடமையாக இருக்கிறது.

ஹஞ் தொடர்ச்சியான மத சடங்குகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஹஜ், ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது.  

(புகைப்படம்: AFP)

558,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதிலிருந்து ஆன்லைன் குலுக்கல் முறை மூலம் ஹஜ் பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 18-65 வயதிற்குட்பட்டவர்கள் இந்த புனிதப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். (புகைப்படம்: AFP)

யாத்ரீகர்கள் 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, எந்தவொரு தொற்றும் ஏற்படாமல் இருப்பதறகாக சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சக துணைச் செயலாளர் முகமது அல் பிஜாவி தெரிவித்தார்.

(புகைப்படம்: AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link