சனி உதயத்தால் இந்த ராசிகளுக்கு அபாரமான ராஜயோகம், பண மழை பொழியும்!!
மிக முக்கிய கிரகமான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் உதயமாக உள்ளார். மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் சனி உதயத்தால் தன ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறவுள்ள அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் ஜனவரி 31 அன்று அஸ்தமனமானார். இப்போது அவர் உதயமாகவுள்ளார். சனி கும்ப ராசியில் உதயமாவார். சனியின் இந்த மாற்றம் ராஜ யோகத்தை உருவாக்கும், இந்த ராஜயோகம், கும்பம், சிம்மம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் நன்மைகளைத் தரும்.
சனி உதயம் கும்ப ராசியில் நிகழும். ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் புனிதமானதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சனி பகவானின் கோச்சாரத்தால் ஷஷ ராஜயோகம் உருவாகும். சனி தேவின் எழுச்சியின் செல்வாக்கு காரணமாக, கும்ப ராசிக்காரர்கள் வணிகத்தில் அதிகப்படியான லாபம் அடைவார்கள்.
சனி பகவானின் உதயத்தால் சிம்ம ராசியில் தன ராஜ யோகம் உருவாகவுள்ளது. இதனால் சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் மூதாதையர் சொத்துக்களிலிருந்தும் பயனடையலாம்.
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகிறார். இந்த ஸ்தானம் வீடு வேலை மற்றும் தொழில் ரீதியான ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், ரிஷப ராசிக்காரர்கள் தொழில் ஸ்தானத்தில் பயனடைவார்கள். வேலை செய்யும் நபர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் வணிகர்களும் பயனடைவார்கள்.