இதுதான் 2024இல் சூப்பர்ஸ்டார் ஸ்மார்ட்போன்... 5 காரணங்கள் இதோ!

Thu, 07 Dec 2023-12:33 pm,

OnePlus 12 ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்.

 

இந்த மொபைல் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ப்ரீமியம் வகை போன்களுடன் கடுமையாக போட்டியிடும் என கூறப்படுகிறது. இது அடுத்த ஆண்டின் மிகச் சிறந்த ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. அதற்கான 5 காரணங்களை இங்கு காணலாம்

OnePlus 12 Display: இந்த மொபைல் 6.82 இன்ச் QHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 4,500nits உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. இது சந்தையில் பிரகாசமான திரையை உருவாக்குகிறது. அதாவது வலுவான சூரிய ஒளியில் கூட காட்சி நன்றாக இருக்கும்.

 

OnePlus 12 Water Ressistant: இதில் மழை நீர் தொடுதல் தொழில்நுட்பம் (Rainwater Touch Technology) பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பொருள் மழைக்காலத்திலும் உங்கள் மொபைல் டிஸ்ப்ளே பிரச்னை இல்லாமல் வேலை செய்யும். இது முதலில் OnePlus Ace 2 Pro மொபைலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

OnePlus 12 Processor: இந்த மொபலை Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட்டைக் கொண்டுள்ளது. சிப்செட் மூலம், OnePlus 12 சிறப்பாக செயல்படுகிறது. கேம்களை விளையாடவும், வீடியோக்களை பார்க்கவும் இது சிறப்பான அனுபவத்தை தரும். 

 

OnePlus 12 Battery: இந்த மொபைலில் 5,400mAh பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன்மூலம், விரைவாகவே சார்ஜ் செய்யலாம்.

 

OnePlus 12 Camera: இதில் 50MP பிரதான கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை அடங்கும். பிரதான கேமரா 50MP சோனி IMX766 சென்சார் பயன்படுத்துகிறது. OnePlus தனது ஸ்மார்ட்போனில் முதல் முறையாக பெரிஸ்கோப் கேமராவை சேர்த்துள்ளது. இந்த கேமரா 6x ஆப்டிகல் ஜூம் வழங்குகிறது. முன் கேமராவில் இப்போது 32MP சென்சார் உள்ளது, இது 4K வீடியோக்களை படமெடுக்கும் திறன் கொண்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link