Mera Ration 2.0 | ரேஷன் கார்டு விதியில் மாற்றம்.. இனி ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்
ரேஷன் கார்டு ஹோல்டர்ஸ்க்கு எல்லாம் ஒரு குட் நியூஸ். இனி உங்கள் ரேஷன் கார்டு எடுத்துட்டு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த ஒரு மொபைல் அப்ளிகேஷன் இருந்தால் போதும் நீங்க ஈஸியா ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியும். அதன் விவரங்களை டீடைலாக பார்ப்போம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இன்றும் இரண்டு வேளை உணவுக்கு ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். இத்தகைய ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் வழங்கும் திட்டத்தை இந்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது. இதற்காக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தேவைப்படும் குடிமக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொருள் வாங்க வேண்டும் என்றால் ரேஷன் கார்டு மூலம் தான் வாங்க முடியும். முதலில் உங்கள் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்யப்படும் மற்றும் உங்கள் கைரேகையும் ஸ்கேன் பண்ணுவார்கள். இந்த செயல்முறை முடிந்த பிறகு தான் ரேஷன் பொருட்கள் வாங்க முடியும்.
ஆனால் இனிமேல் ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு கொண்டு செல்ல தேவையில்லை. ஏனென்றால் தற்போது ஒரு புதிய அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அந்த அப்ளிகேஷன் இருந்தாலே போதும் பொருட்கள் வாங்க முடியும்.
அந்த அப்ளிகேஷனை சென்ட்ரல் கவர்மெண்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. மேரா ரேஷன் 2.0 என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் ஆதார் நம்பர் உட்பட சில தகவல்களை கேட்கப்படும். அதன்பிறகு உங்கள் மொபையில் நம்பருக்கு ஓடிபி வரும். அதை உள்ளீட்டு வெரிஃபை செய்த பிறகு செயலின் உள்ளே நுழைய முடியும். இப்பொழுது உங்க டிஜிட்டல் ரேஷன் அட்டை அங்கே இருக்கும். அதைக்காட்டி நீங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியும்.
மேரா ரேஷன் 2.0 செயலி ஓபன் செய்து உங்கள் டிஜிட்டல் ரேஷன் கார்டை காட்டினால், அதில் இருக்கும் க்யூஆர் கோடு (QR Code) ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வழங்ககப்படும். எனவே இதன்மூலம் ரேஷன் கார்டுக்குப் பதிலாக மேரா ரேஷன் 2.0 செயலியைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த செயல்முறை அடுத்த ஆண்டு முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு ரேஷன் கார்டு எடுத்து செல்லத் தேவையில்லை.