MI vs RR: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா?
)
ஐபிஎல் 2024ன் இந்த சீசனில் மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரது தலைமையில் மும்பை அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
)
ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு மும்பை அணியின் ரசிகர்கள் மிகுந்த கோபத்திலும் வருத்தத்திலும் இருந்து வருகின்றனர். இதனால் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு கடுமை எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
)
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் என்றும் மீண்டும் ரோகித் சர்மா கேப்டன் பதவியை ஏற்றுள்ளார் என்றும் ஒருவர் X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மைதான் என்று பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று கூறப்படுகிறது.
மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என்றும் ரோகித் சர்மா அவருக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் மும்பை இந்தியன்ஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.