மிரட்டும் மிக்ஜாம்! எந்த தேவைக்கு யாரை அழைக்கலாம்? அரசின் உதவி எண்கள் இதோ!

Sun, 03 Dec 2023-4:24 pm,

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வந்து கொண்டிருப்பதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு பல உதவி எண்களை அறிவித்துள்ளது. அந்த எண்கள் என்னென்ன? அவற்றை எப்படி, எங்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம். 

மழை காரணமாக வீடுகளுக்குள் பல விஷ ஜந்துக்கள் நுழைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வந்து விட்டால், 044-22200335 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த சேவை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 27*7 செயல்படுகிறது. 

வீட்டிற்குள் மழை நீர் புகுந்தாலோ அல்லது மழையில் சிக்கிக்கொண்டாலோ தொடர்பு கொள்ள சில உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-2519204, 044-2561209 மற்றும் 044-25619207 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். 

மழையின் போது மின்துறையை 1912 என்ற எண்ணிலும், சுகாதாரத்துறையை 108 அல்லது 104 ஆகிய எண்ணிலும் தொடர்பு கொள்ளலம். காவல் துறைய 100, 112, 1931, 1073, 1091 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மழையினால் ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நின்றால், கீழ்கண்ட உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அப்படியில்லையெனில், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியை போட்டோ எடுத்து #ChennaiRains, #Chennaicorporations என்ற ஹேஷ்டேக்குகளை இணைக்கலாம். 

மிக்ஜாம் புயல், நாளை ஆந்திராவில் கரையைகடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசு, பொதுமக்களை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link