மைக்ரோசாப்ட்டின் செம ஐடியா..! இனி காரில் இருந்தே மீட்டிங்கில் பங்கேற்கலாம் - எப்படி?
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வழக்கம் அதிகரித்தது. இதனால் அலுவலக மீட்டிங்க்கள் பெரும்பாலும் வீடியோ கால் மூலம் நடத்தப்பட்டன. இந்த வீடியோ கால் மீட்டிங்கை எளிதாக நடத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டீம்ஸ் என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது.
இந்த அப்ளிகேஷன் மூலம் பல நிறுவனங்கள் தங்கள் அலுவலக மீட்டிங்கை சிறப்பாக நடத்தி வருகின்றன. இந்த டீம்ஸ் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் கார்களில் பயன்படுத்தும் வழிமுறையை அறிமுகப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்டேட்டை பயன்படுத்துவதால், ஒருவர் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டால், அவர் உடனடியாக தன் காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழியாகவே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அலுவலக மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியும்.
இதனால் அவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு தனது செல்போனை எடுத்து அதன் மூலம் கணக்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்சம் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது வரை மீட்டங்கில் இணைவது புதிதாக மீட்டிங்கை உருவாக்குவது காலண்டர் மூலம் அடுத்தடுத்த மீட்டிங்கில் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டிரைவ் செய்து கொண்டிருக்கும்போதே இதை ஆப்பரேட் செய்யும் வகையில் குறைவான டிஸ்ட்ராக்ஷன் இருக்கும் படியாக இது வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனம் ஓட்டிக்கொண்டே இப்படியாக மீட்டிங்கில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். அதனால் இது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபட வேண்டாம்.
ஆனால் இந்த அம்சத்தை நீங்கள் வாகனத்தை ஓரமாக பாஸ் செய்து விட்டு உடனடியாக மீட்டிங்கில் கலந்து கொண்டு உங்கள் அலுவலக பணிகளை செய்யலாம் என இதன் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த அப்டேட் வெளியானால், அலுவலகத்திற்கு பணியாற்றுபவர்களுக்கு மிகப்பெரிய வசதியை ஏற்படுத்தித் தரும். டிராபிக்கில் மாட்டிக்கொண்டாலும் அலுவலக மீட்டிங்கை மிஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.