மதுரையில் அமையப்போகும் கலைஞர் நூலகத்தின் பிரம்மாண்ட புகைப்படங்கள்!
கலைஞர் நூலகமானது மதுரை - நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.114 கோடி பொருட்செலவில் அமையப்போகிறது.
"முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்" என்ற பெயருடன் உருவாகப்போகும் இந்த பிரம்மாண்ட நூலகம் 7 மாடிகளுடனும், 300க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையிலான கார் பார்க்கிங் வசதியுடனும் அமைய போகிறது.
இந்த பிரம்மாண்ட நூலகத்தின் கட்டுமான பணியை தொடங்கும் பொருட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரி அமைப்பு படங்கள் வெளியாகியுள்ளது. அதில் நூலகத்தின் முகப்பு பக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல துறைகள் சார்ந்த பல லட்சக்கணக்கான நூல்கள் இடம்பெற உள்ளது. இது அப்பகுதிவாழ் மக்களின் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.