Mohammed Shami: 16 வருஷத்துக்கு அப்புறம் முகமது சமி செய்த சூப்பர் ரெக்கார்டு

Sat, 23 Sep 2023-8:32 am,

மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசினார்.

 

முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷை அவுட்டாக்கிய அவர், ஸ்டொயினஸ் உள்ளிட்ட 5 ஆஸ்திரேலிய வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார்.

 

10 ஓவர்களில் 51 ரன்கள்  விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

 

கடந்த 16 ஆண்டுகளாக இந்திய மண்ணியில் எந்தவொரு இந்திய வேகப்பந்துவீச்சாளரும் 5 விக்கெட் எடுக்கவில்லை. அந்த குறைக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தார் முகமது ஷமி. 

 

கடைசியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கோவாவில் 2007-ல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேபோல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளரும் முகமது ஷமி தான்.

 

அதேபோல், ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் 3வது வீரராக இணைந்துள்ளார். ஏற்கனவே கபில்தேவ் 1983-ல் நாட்டிங்ஹாம் மேட்சில் 43 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்துள்ளார்.

 

அவருக்கு அடுத்தபடியாக தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அஜித் அகர்கர் 2004 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற போடியில் 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 

 

முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் பிளேயிங் லெவனில் முகமது ஷமிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link