குரங்கு அம்மை சிகிச்சையில் டெகோவிரிமேட் வேலை செய்யவில்லை... பதற்றத்தில் மருத்துவர்கள்

Sun, 18 Aug 2024-4:06 pm,

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இந்நோய் குறித்த அச்சம் வெகுவாக அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் போலவே ஆபத்தான தொற்று நோயாக மாறலாம் என்று பல நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

மங்கி பாக்ஸின் கிளேட்-1 வகை தொற்றில் டெகோவிரிமாட் என்ற வைரஸ் தடுப்பு மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மருந்தினால் காயங்கள் ஆறவில்லை, உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், டெகோவிரிமாட் மருந்து பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவை தற்போது சிகிச்சையில் பலன் அளிக்கவில்லை

டெகோவிரிமாட் மருந்தினை கிளேட் -1 வகை குரங்கு அம்மை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் போது, அவர்கள் உடல் நல ஆரோக்கியம் மேம்படவில்லை. அவர்களின் காயங்கள் ஆறவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

டெகோவிரிமாட் மருந்து பெரியம்மை சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்டது. இந்த மருந்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. குரங்கு மற்றும் பெரியம்மை மிகவும் ஒத்தவை என்றாலும் குரங்கு அம்மை பெரியம்மை விட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள்.

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள்: குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்ச்சல் அதிகம் இருக்கும். இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் காய்ச்சல் கைகள், கால்கள், மார்பு, முகம் அல்லது வாயில் அல்லது பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு ஆகியவை குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள்.

குரங்கு அம்மை நோய் பரவும் விதம்: குரங்கு அம்மை என்னும் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் சருமம்,  வாய் அல்லது பிறப்புறுப்பு ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு ஏதேனும்ம் ஏற்படுவதன் மூலம் குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

 

குரங்கு அம்மை ஏற்படாமல் தடுக்க, சுகாதாரம் மற்றும் தூய்மையில் கவனம் செலுத்துவது முக்கியம். பொது இடங்களில், அதிக கவனத்துடன் இருப்பதும் அவசியம். குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி, பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link