செப்டம்பர் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: ராஜயோகம், நினைத்தது நடக்கும்

Mon, 05 Sep 2022-9:27 pm,

மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நம்பிக்கையின் பலத்தால் மிகப்பெரிய சவாலை சமாளிப்பார்கள். சிலருக்கு வேலையை மாற்றும் வாய்ப்பு வரும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒரு புதிய உறவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

செப்டம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டாகும். நீங்கள் சில பயணங்களை மேற்கொள்ளலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் தொழில் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளும் வெற்றி பெறுவார்கள். உங்கள் மனசாட்சியின் பலத்தால் நீங்கள் இழப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். குழந்தைகள் பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் உண்டாகும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம். டென்ஷன் குறைவாக இருக்கும். நிம்மதியாக உணர்வார்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். வேலை அழுத்தம் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். வலுவான பண ஆதாயம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link