குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் கோடீஸ்வர யோகம்.... பணம், புகழ், பதவி அனைத்தும் கிட்டும்
2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார்.
2025 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசியில் நுழைகிறார். தேவகுரு வியாழன் ஒரு ராசியில் சுமார் 13 மாதங்கள் இருக்கிறார். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் அவர் மே மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது 2025 ஆம் ஆண்டின் மிக முக்கியமான பெயர்ச்சியாக கருதப்படுகின்றது.
மிதுன ராசியில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: 2025 -இல் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். இவர்களுக்கு எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கலாம். வியாபாரம் பெருகும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இவர்களுக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். தாம்பத்திய வாழ்க்கை நல்லபடியாக நடக்கும்.
மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்கு இனிமையாக இருக்கும். இவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்க்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். உங்களது தன்னம்பிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றி யோசிக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பெயர்ச்சி மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.
கும்பம்: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு வியாபாரத்தில் பண பலன்கள் கிடைக்கும். நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு இப்போது நிவாரணம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நலல் வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக நடக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருளைப் பெற, 'குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், தக்ஷிணாமூர்த்தயே நமஹ' என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.