சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... வேலை, வியாபாரத்தில் வெற்றி கிட்டும்
சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி, அதாவது நேற்று வக்ர நிவர்த்தி அடைந்தார். 139 நாட்கள் வக்ர நிலையில் இருந்த அவர் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு புகழ், செல்வம், வேலை மற்றும் நல்ல ஆரோக்கியம் என அனைத்து செல்வங்களும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: சனி வக்கிர நிவர்த்தி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்க கூடியதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சனி பகவானின் அருளால் பண வரவு அதிகமாகும். புதிய வேலை கிடைக்கவும் ஏற்கனவே உள்ள வேலையில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வணிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பரிபூரண ஆதரவை பெறுவீர்கள்.
கன்னி: சனி வக்ர பெயர்ச்சி, கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த காலத்தில் பல வித வெற்றிகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு கூடும். மாத வருமானம் அதிகரிப்பதால் வங்கி இருப்பும் பன்மடங்காக உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
மகரம்: சனி வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அள்ளித் தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இப்போது முதலீடு செய்ய ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புகள் வரும். உங்கள் பேச்சாற்றலும், பேச்சின் தாக்கமும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். உங்கள் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சனி பகவானின் அருள் பெற. ‘நீலாஞ்சன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; சாயா மார்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை கூறுவதும் பலன் தரும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவர்களை சனி பகவான் காத்து ரக்ஷிக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.