சனி வக்ர பெயர்ச்சி: 4 ராசிகள் மீது அருளை அள்ளி வீசுவார் சனி, வெற்றி மழையில் நனைவார்கள்

Wed, 24 May 2023-6:09 pm,

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் ஜூன் 17, 2023 அன்று இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைவார். வக்ர பெயர்ச்சி என்றால், இயக்கம் எதிர் திசையில் மாறுவது என்று பொருள். சனி இந்த வக்ர நிலையில் நவம்பர் 4, 2023 வரை இருப்பார்.

 

கும்பத்தில் வக்ர பெயர்ச்சி: சனி பகவான் கும்ப ராசியிலேயேதான் வக்ர பெயர்ச்சி அடைவார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நஷ்டமும் சிலருக்கு லாபமும் கிடைக்கும். 

ராசிகளில் தாக்கம்: சனி பகவானின் வக்ர நிலையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும் சில ராசிகளில் இதன் விளைவால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் இந்த காலத்தில் அமோகமான வெற்றியை பெறுவார்கள். சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் பெரும் பலன்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்

மேஷம்: சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு ஒரு வரபிரசாதமாய் இருக்கும். பண ஆதாயத்திற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சனிபகவானின் சிறப்பு அருளைப் பெறுவீர்கள், அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். சனிபகவானின் அருளால் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 

கன்னி:  நீங்கள் இந்த காலத்தில் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெளிநாடு செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். பல வித நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்களுக்கு இருக்கும் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்துவீர்கள்.

விருச்சிகம்: பண ஆதாயத்திற்கான சிறந்த மற்றும் எளிதான வாய்ப்புகள் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களால் பெரும் பலன்களைப் பெறலாம். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொண்டு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

தனுசு: சனியின் வக்ர பெயர்ச்சி காலத்தில் உங்கள் வேலையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். லாபத்திற்கான நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link