இன்னும் 6 நாட்களில் சனி உதயம்.. இந்த ராசிகளுக்கு நல்ல பலன், ராஜயோகம் ஆரம்பம்
மேஷ ராசிக்காரர்களுக்கும் சனியின் உதயத்தால் நன்மை பலன் உண்டாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சம்பளஉயர்வை பெறலாம். பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வருமானம் கூடும். தொழிலில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கும் சனியின் உதயத்தால் சாதகமான பலன் கிடைக்கும். உறவுகள் மேம்படும். பெற்றோரின் ஆதரவையும் பெறுவீர்கள். வாகனம், வீட்டு வாங்கலாம். சனியின் அருளால் மகிழ்ச்சி, செழிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கும் சனியின் உதயத்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். புதிய தொழிலை தொடங்கலாம். லாபத்தை அள்ளுவீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்தவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கும் சனியின் உதயத்தால் சுப பலன்கள் கிடைக்கும். பண பலன்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் சுபமாக முடிவடையும். புதிய தொழிலை தொடங்க திட்டமிடுவீர்கள். பணியிடத்தில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் பதவி உயர்வு பெறலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கும் சனியின் உதயத்தால் நிறைய மகிழ்ச்சிகள் வந்து சேரும். வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இன்பமான சூழல் இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலையில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.