குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பணம், லாபம், மகிழ்ச்சி அதிகரிக்கும்
அனைத்து கிரகங்களிலும் முக்கியமான கிரகமாக கருதப்படும் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் இருக்கிறார். அவர் ஒரே ராசியில் நீண்ட காலத்திற்கு இருப்பதால் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். 2025 வரை இதே ராசியில் இருப்பார். ராசி மாறாவிட்டாலும் இந்த அண்டில அவர் தனது நட்சத்திரத்தை மாற்றுவார்
ஏப்ரல் ஏழாம் தேதி சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நட்சத்திர பெயர்ச்சி அடையவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது
சனியின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சனி மற்றும் குரு பகவானின் விசேஷ அருள் சில ராசிகளுக்கு அதிகமாக கிடைக்கும். இவர்கள் அதிகப்படியான நற்பலன்களை அனுபவிப்பார்கள். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைலள் அனைத்தும் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் பெற்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள்.
சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியான உடன் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்
மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் பெரிய நிதி ஆதாயத்தை பெறுவீர்கள். இதனால் உங்களது பொருளாதார நிலை மேம்படும். மாணவர்களுக்கு இது அனுகூலமான காலமாக இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்சன சமாபாசம், ரவிபுத்ரம் யமாக்ராஜம், சஹாயா மார்தாண்ட சம்பூதம், தம நமாமி ஷனய்ஷ்ச்சரம்' என்ற இந்த ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.