வேகமா எடை குறைய தினமும் காலை இந்த குட் மார்ணிங் ட்ரிங்ஸ் குடிங்க போதும்
நாம் அனைவரும் நம் உடல் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனினும் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுகள், பானங்கள் ஆகியவற்றினால், நம் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு அதிகரிக்கின்றது. இதனால் உடலின் ஒட்டுமொத்த வடிவமும் கெட்டுவிடுகின்றது.
அனைவருக்கும் ஜிம் செல்லவோ, உடற்பயிற்சிகளை செய்யவோ, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சிகளை செய்யவோ வசதியும் நேரமும் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்கள் மூலம்தான் உடல் எடையை குறைக்க வேண்டும்.
சில பானங்களை குடிப்பதன் மூலம் இதற்கான தீர்வு நமக்கு கிடைக்கும். எளிதாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரீன் டீ: கிரீன் டீ பால் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் தேநீருக்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றது. அதன் சுவை கசப்பாக இருந்தாலும், எடை குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எலுமிச்சை நீர்: எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் கண்டிப்பாக எலுமிச்சை நீரை குடிக்கலாம். காலையில் எழுந்ததும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, அதனுடன் கருப்பு உப்பு கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை வெகுவாக குறையும்.
ஓம நீர்: ஓமம் அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு மசாலா. இதன் நீரை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, இது எடையைக் குறைக்க உதவுகிறது. ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது செரிமானத்தையும் சீராக்கும்.
சோம்பு நீர்: சோம்பு பெரும்பாலும் உணவுக்குப் பிறகு மெல்லப்படுகிறது. ஏனெனில் இது இயற்கையான வழியில் வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது செரிமானத்தையும் சீராக்குகிறது. ஒரு ஸ்பூன் சோம்பை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதை வடிகட்டி குடிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.