கோடை காலத்தில் நாள் முழுவதும் கூலாக இருக்க வைக்கும் மார்னிங் டிரிங்க்ஸ்
பச்சை மாம்பழ ஜூஸ் என்னும் ஆம் பன்னாவை தினமும் காலையில் குடித்தால், கடும் கோடையிலும் உங்கள் உடல் கூலாக இருக்கு. இது பச்சை மாம்பழ கூழ், சீரகம் மற்றும் புதினா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இதை குடித்த உடனேயே புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். வைட்டமின் சியும் இதில் ஏராளமாக உள்ளது.
இளநீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு, சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதனுடன், உடலின் நீர்சத்து பற்றாக்குறையையும் நீக்குகிறது. கோடையில் தினமும் இளநீர் குடிப்பது நல்லது என்பதற்கான காரணம் இதுதான்.
மஞ்சளின் பல நன்மைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கோடையில் மஞ்சள் மற்றும் இஞ்சி சாறும் உங்களை கூலாக வைத்திருக்கும். இந்த சாறு இஞ்சி, மஞ்சள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனை அருந்துவதன் மூலம் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள் உடலுக்கு அதிகம் கிடைக்கும்.
நீர்ச்சத்து நிறைந்த பழங்களின் பட்டியலில் தர்பூசணி முதலிடத்தில் உள்ளது. தினமும் தர்பூசணி சாறு குடித்து வந்தால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாது. தர்பூசணி ஜூஸ் குடிப்பதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.