ஓவரா எகிறும் உடல் எடையை குறைக்கும் பானங்கள்: நம்புங்க... குடிச்சே குறைக்கலாம்
உடல் எடையை குறைக்க இஞ்சி மற்றும் எலுமிச்சை பானத்தை காலையில் குடிக்கலாம். இதனால், எடை குறையும், குடல் பிரச்சனைகள் தீரும், வீக்கம் மற்றும் பிடிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை (Apple Cider Vinegar) தண்ணீரில் கலந்து காலையில் குடித்து வந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரித்து பசி குறையும். இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க குறைந்த கலோரி கொண்ட காய்கறி சாறுகள் உதவும். காலை உணவில் இதை கண்டிப்பாக குடிக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் கலவைகள் பிளாக் டீயில் உள்ளன. இதில் அதிக அளவு பாலிபினால்களும் உள்ளன. இதை குடித்து வந்தால், சில நாட்களில் உடல் எடை குறையும்.
கிரீன் டீயில் (Green Tea) கேடசின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.
சோம்பு (Fennel Seeds) செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்ததாக கருதப்படுகின்றது. உடல் எடையை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு நீர் குடிக்கலாம். இது கலோரிகளையும் எரிக்க உதவும். இது பசியைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஓம நீர் சிறந்த தீர்வாக அமையும். தினமும் இதை காலை வேளையில் குடித்து வந்தால், விக விரைவாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். ஓமம் பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.