மாமியார் வீட்டிலேயே மணமகன் வாழும் காஸி பழங்குடியின சமூகம்! பெண்களுக்கே சொத்துரிமை!
பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் திருமணத்திற்குப் பிறகு மணப்பெண் கணவரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும், ஆனால் இந்த விதி ஒரு சமூகத்தில் மாறுபடுகிரது. திருமணத்திற்கு பிறகு மணமகன் தனது வீட்டை விட்டு வெளியேறி மாமியார் வீட்டில் குடியேற வேண்டும்
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள காஸி பழங்குடியின சமூகத்தினரின் திருமண நடைமுறை மாறுபட்டது. குடும்பத்தை நடத்துவதும் தாய் தான்... தாய்வழி சமூகமாக இருக்கும் சமூகங்களில் ஒன்று காஸி பழங்குடியினச் சமூகம்
சொத்து தாயிடமிருந்து மகளுக்கு செல்லும், அதாவது வாரிசு என்பது தாய்க்கு பின் மகள் தான். அதே போல, திருமணத்திற்குப் பிறகு, பெண் தனது குடும்பப்பெயரை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. மகளும் அவளுடைய குழந்தைகளும் திருமணத்திற்குப் பிறகு தாயின் குடும்பப்பெயரை வைத்திருக்கிறார்கள், திருமணமான ஆண் தனது மாமியார் வீட்டில் வசிக்கிறார்
காஸி சமூகத்தில், பெண்களுக்கு முழு மரியாதை அளிக்கப்படுகிறது, ஆண்களை விட பெண்களுக்கு அதிக உரிமைகள் உண்டு
திருமணங்களில் சில சுவாரஸ்யமான பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன, அதில் பெண்கள் தான் திருமணம் செய்துக் கொள்வது தொடர்பாக ஆண்களிடம் கேட்பார்களாம். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் வழங்கப்படுகிறது.
திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு அறிவார்கள். ஆனால், இரு குடும்பத்திலும் உள்ளவர்களின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்பது விதி
மேகாலயாவின் காஸி பழங்குடி திருமணத்தில் வரதட்சணை முறையே கிடையாது
திருமணங்களில் ஆடை அணியும் பாணி மிகவும் தனித்துவமானது. மணப்பெண்களின் உடையை உள்ளூர் மொழியில் தாரா அல்லது ஜைனசம் என்று அழைக்கின்றனர்