கணவனை தன் கையில் வைத்திருக்கும் பெண்களின் ராசிகள் இவை: உங்க மனைவியின் ராசி என்ன?

Sat, 19 Nov 2022-4:10 pm,

இந்த ராசியின் பெண்கள் அன்பால் மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள். தங்கள் இனிமையான பேச்சால் இவர்கள் கணவன் வீட்டாரையும் தன்வசப்படுத்தி விடுவார்கள். தங்களது காதலால் கணவனையும் கட்டுப்படுத்தி அனைத்து வேலைகளையும் சாத்தித்துக் கொள்வார்கள். அவர்கள் முன், கணவனும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொருவரின் இயல்பும், விருப்பு வெறுப்பும் வேறுபடும். மகர ராசிப் பெண்கள் பயமற்றவர்களாகவும், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் இயல்பு காரணமாக, யாரையும் தங்கள் பேச்சுக்கு எதிராக பேச விடுவதில்லை. அவர்கள் கெட்ட விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், இந்தப் பொண்ணுங்களுக்கு யாருக்கும் அடங்கி இருக்க பிடிக்காது.

இந்த பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்கள், யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். கணவன் மற்றும் மாமியாரை வீட்டாரை முழுமையாக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள், குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் வர விடமாட்டார்கள். தங்களது ஆதிக்க குணத்தால் கணவனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். மேலும் அவர்களுக்கு முன்னால் யாருடைய கருத்தும் எடுபடாது. 

ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசி பெண்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். முதல் பார்வையிலேயே இவர்கள் அனைவரையும் மயக்கி விடுகிறார்கள். விருச்சிக ராசி பெண்ணின் கணவரும் மனைவியிடன் மயங்கிதான் இருப்பார். இந்த ராசி பெண்கள் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, கணவன் மற்றும் குடும்பத்தினரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்கள் நன்றாக புரிந்துகொள்கிறார்கள். கணவனோ மற்றவர்களோ தவறு செய்தால் அதை எளிதில் இந்த பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link