உலகின் மிக விலையுயர்ந்த நாடுகள்! தலைசுற்ற வைக்கும் விலைவாசி
பிரபல மற்றும் காதல் ஜோடிகளின் இதயங்களை அழகுக்காக ஆளும் சுவிட்சர்லாந்து, மிகவும் விலையுயர்ந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உங்கள் வீட்டில் வசிக்க நீங்கள் வரி செலுத்த வேண்டும். உணவகங்கள் முதல் ஆடை-மளிகை பொருட்கள் என அனைத்தும் பணவீக்கத்தின் எல்லையை தாண்டிவிட்டன.
ஐஸ்லாந்து இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடங்களில் ஒன்றாகும். இங்கு வீடு கட்டுவதற்காகும் செலவை விட உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை அதிகம் என்பது ஆச்சரியமான தகவல்.
ஏனென்றால், இங்கு பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உணவு பொருட்களின் விலை மிகவும் அதிகம்.
நார்வேயின் அழகால் மயங்குவதால் ஏற்படும் அந்த நாட்டின் மீதான மோகம், அங்கு உணவுக்கு செய்ய வேண்டிய செலவை அறிந்தால் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்ற பழமொழி உண்மையாகிவிடும்.
நார்வேயில் VAT வரி 25% வரை விதிக்கப்படுகிறது. உணவுப் பொருட்களுக்கு 15% வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இங்கு நிலவும் பணவீக்கம் காரணமாக, ஏராளமானோர் ஷாப்பிங் செய்வதற்கு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இந்த தீவின் அழகு இந்த இடத்திற்கு பலரை ஈர்க்கிறது. இந்த பிரிட்டிஷ் தீவுப் பிரதேசத்தின் தலைநகரான ஹாமில்டன் மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகும். பெர்முடாவின் வாழ்க்கைச் செலவு அமெரிக்காவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான டென்மார்க் ஹை-ஃபை உணவகங்களுக்கு பெயர்பெற்றது. ஆனால் மிகவும் விலையுயர்ந்த நாடு. இரண்டு பேர் சாதாரணமாக உணவு உண்ண ஒரு நாளைக்கு சுமார் 6,800 ரூபாய் செலவாகும்.
இங்கே வாழ்க்கை நிச்சயமாக உயர்தரமாக இருக்கும். ஆனால் இதற்காக செய்யும் செலவு மிகவும் அதிகமாக இருக்கும்.
லக்சம்பர்க் உலகின் 85% நகரங்களை விட விலை அதிகமானது. பால் முதல் மாட்டிறைச்சி வரை அனைத்தும் விலை அதிகம்.
பிரான்சில் உள்ள விலைவாசியை விட லக்சம்பர்க்கில் மிகவும் அதிகம். எனவே, பலர் எல்லையைத் தாண்டி ஷாப்பிங்கிற்காக பிரான்சுக்குச் செல்கிறார்கள்.