சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 181 நாட்கள் இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

Sun, 07 Apr 2024-8:54 am,

மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். லட்சியங்களில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வை பெறலாம். நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சொந்த தொழிலை விரிவுபடுத்தலாம். இருப்பினும், திருமணத்தில் தாமதங்களை சந்திக்க நேரிடலாம், இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் ஏமாற்றமடைவார்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். தொழிலில் உயரத்திற்கு செல்வீர்கள். விரும்பிய வேலை இடமாற்றம் பெறலாம். சம்பளம் உயரலாம். நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். 181 நாட்களில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும். 181 நாட்களில் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். வியாபாரம் தொடர்பாக பயணம் செய்ய நேரிடலாம். காதல் உறவுகளில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். ஆன்மிக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். 

கடக ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை சந்திக்கும் நேரமாக இருக்கும். வாழ்க்கையின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த வரும் 181 நாட்களில் திருமண வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படும். திடீர் லாபம் அல்லது நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். மனைவியுடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சனிப்பெயர்ச்சி காரணமாக, சொத்து அல்லது ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம்.

சனி நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவரும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றில் இருந்து குணமடைவீர்கள். 

துலாம் ராசி மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு ஏற்ப சிறப்பான பலன் கிடைக்கும். கல்வித் துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை அல்லது வியாபாரம் செய்வதில் வெற்றி பெறலாம். இருப்பினும், திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வாக்குவாதங்கள் ஏற்படும், கவனமாக இருக்கவும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருப்தியைத் தரும். கார் அல்லது வீடு வாங்கலாம். இருப்பினும், உங்களுக்கு உடல் சோர்வு மற்றும் மன வலி ஏற்படலாம். சொந்தத் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சனியால் சில பிரச்சனைகள் வரலாம். 

தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். வரும் 181 நாட்களுக்கு தொழில் வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுடனான உறவுகள் வலுவடையும். வேலை சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம்.

மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் பணம் வரவு ஏற்படும். அமானுஷ்ய ஆய்வுகள் அல்லது மர்ம அறிவியலில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இருப்பினும், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி பிரச்சனைகளை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிக்கும், உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். மன அழுத்தத்திற்கு பலியாகலாம். இருப்பினும், தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். 

மீன ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி சவால்களைத் தரும். எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 181 நாட்களில் வெற்றி கிடைக்காமல் போகலாம். செலவுகள் அதிகரிக்கலாம். இருப்பினும், சொந்தத் தொழில் மூலம் நன்மை அடைவார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக மன அழுத்தத்தை சந்திக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link