தீபாவளியில் சனி - குருவின் வக்ர நிலை... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்ககளை அளிப்பதால் அவர் நீதிக் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த 2024 ஜூன் 30ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், நவம்பர் 15 ஆம் தேதி தீபாவளிக்கு பின்னர் வக்ர நிவர்த்தி அடையுள்ளார்.
குரு பகவான் அக்டோபர் 9, 2024 அன்று ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், 2025 பிப்ரவரி 5, 2025 வரை வக்ர நிலையில் இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர நிவர்த்தி அடைவார்.
தீபாவளி சன்று, சனி குரு ஆகிய இரு முக்கிய கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சனி மற்றும் குரு வக்ர நிலையினால், அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி மற்றும் குருவின் வக்ர நிலையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அமோகமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிம்மம்: குரு மற்றும் சனியின் வக்ர நிலை சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும். நிதி ஆதாயம் உண்டாகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்வில் சுகபோகங்களும் ஆடம்பரங்களும் பெருகும். பணம் கிடைக்கும். புதிய வாகனம், வீடு, சொத்து வாங்கலாம். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.
மகரம்: இரண்டு கிரகங்களின் வக்ர நிலை மகர ராசிக்காரர்களுக்கு தன யோகத்தை உருவாக்குகிறது. அலுவலக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பணம் கிடைக்கும். பணம் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தம் நிறைவடையும்.
சனி பரிகாரங்கள்: சனி பகவானின் அருள் பெறவும், சனிபகவானின் வக்ர நிலையினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளாறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் சனி பகவான் மட்டுமல்லாது, பிள்ளையார், முருகர், சிவன், துர்கை அம்மன் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு உணவளிப்பது சனிபகவானை மகிழ்விக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது