டிசம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகளும்... அமோக வாழ்க்கையை பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்
டிசம்பர் 2024 கிரக பெயர்ச்சி பலன்கள்: சுக்கிரன் பெயர்ச்சி: 2024ம் ஆண்டின் கடைசி மாதமான, டிசம்பர் மாதத்தில், 2ஆம் தேதி, ஆடம்பர வாழ்க்கை மற்றும் செல்வ வளத்தையும் வழங்கு சுக்கிரன் தனது ராசியை மாற்றி மகர ராசிக்கு மாறுகிறார். அதன்பிறகு டிசம்பர் 7-ம் தேதி கிரகங்களின் தளபதி என அழைக்கப்படும் செவ்வாய் கடகத்தில் வக்ர நிலையை அடைகிறார். ஏற்படும்.
சூரியன் பெயர்ச்சி: டிசம்பர் 15-ம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இதனா பிறக்கும் மார்கழி மாதம் சிலருக்கு மிகவும் அதிர்ஷடம் தரும் மாதமாக இருக்கும். அடுத்த நாள், புதன் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
சுக்கிரன் பெயர்ச்சி: மாத தொடக்கத்தில் பெயர்ச்சியான சுக்கிரன் மீண்டும், டிசம்பர் 28 அன்று, சனியின் ராசியான கும்பத்திற்கு மாறுகிறார். மாத கடைசியில், உண்டாகும் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை ஏற்பட்டு சில ராசிகள் சாதகமான பலனைப் பெற்று அமோக வாழ்க்கை வாழ்வார்கள். டிசம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி மாதம் சுப யோகம் உண்டாகும். பணப் பலன்களைப் பெறுவார்கள், உங்கள் முன்னேற்றத்திற்கான சுப வாய்ப்புகள் இருக்கும். உங்கள் சமூக வட்டமும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக, வேலை நிமித்தமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், அவற்றில் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரிஷபம் ராசிக்காரர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் அமையும். வருட இறுதிக்குள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில், வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் வருடத்தின் கடைசி மாதத்தில் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட பலன்களைப் பெறுவார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்கலாம். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வேலையில், உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில், வேலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல பயணங்களும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில், வருமானத்தை உங்கள் முதலீட்டை அதிகரிப்பது பற்றி சிந்திக்கலாம். இதனால் லாபம் உண்டாகும்.
மீன ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புத்தாண்டு தொடங்கும் முன், புதிய முன்னேற்ற பாதைகள் திறக்கப்படும். பணியிடத்தில் உங்கள் திறனை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக வேலை செய்வீர்கள். ஆரோக்கியத்தின் பார்வையில் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்துடன் நிறைவடையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.