குரு பெயர்ச்சி 2025... வாழ்க்கையில் உச்சத்தை தொடப் போகும் சில ராசிகள் இவை தான்
குரு பகவான்: யானையை வாகனமாக கொண்ட குரு பகவான், 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய ராசிகளுக்கு அதிபதி. ராசிகளில் தனுசு, மீனம் ஆகியவற்றுக்கு அதிபதி. குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும்.
குரு பெயர்ச்சி 2025: ரிஷப ராசியில் தற்போது வக்ர நிலையில் உள்ள குரு பகவான், மே 14, 2025 அன்று, மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். முன்னதாக, 2025 பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தி அடைவார்.
குரு வக்ர பெயர்ச்சி: மே 14, 2025 அன்று, ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் நுழையும் குரு பகவான், பிறகு அக்டோபர் 18ஆம் தேதி வக்ர நிலையை அடைவார். பின்னர், டிசம்பர் 3 ஆம் தேதி, வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது, புத்தாண்டில் குரு பகவான் மூன்று முறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறார்.
அதிர்ஷ்ட ராசிகள்: 2025 மே மாத 2025 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியும், குருவின் நிலையில் ஏற்படும் மாற்றமும் முக்கிய ஜோதிட நிகழ்வாக இருக்கும்.இந்நிலையில், குருவின் பெயர்ச்சியினால் பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரிஷபம்: குரு பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வேகம் கூடும். பணியிடத்தில் புதிய பதவி கிடைக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் வரலாம். திருமணமானவர்கள் தங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
மிதுனம்: குரு பெயர்ச்சியினால், மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக நன்மைகள் உண்டாகும். புதிய வழிகள் மூலம் பணம் வரும். முதலீடு மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்: குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் வரலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். அதிர்ஷ்டவசமாக நினைத்ததை விட வேகமாக சில வேலைகள் முடியும். பண பலம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நிலம், கட்டிடம் அல்லது வாகனம் வாங்குவதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.