இந்தியாவின் வியத்தகு சுற்றுலாத் தளங்கள்

Tue, 25 Jan 2022-2:30 pm,

குதாப் மினார், புது தில்லி தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள இந்த உயரமான கட்டமைப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது. 73 மீட்டர் உயரமுள்ள கோபுரம் 1193 ஆம் ஆண்டு, குதாப்-உத்-தின் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது. இந்த உயரமான கோபுரம் ஐந்து தனித்தனி மாடிகளைக் கொண்டுள்ளது.

(Photograph:Twitter)

மெஹ்ரன்கர் கோட்டை, ஜோத்பூர் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மெஹ்ரன்கர் கோட்டை இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். ஜோத்பூர் மக்களை பாதுகாப்பதற்காக இந்த பிரமாண்டமான கோட்டை கட்டப்பட்டது. கோட்டையில் மஹாராஜாக்கள் தொடர்பான கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகமும் உள்ளது.

(Photograph:Twitter)

எல்லோரா குகைகள், அவுரங்காபாத் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் இது. 5 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் புத்த, சமண மற்றும் இந்து துறவிகளால் கட்டப்பட்டது. இந்த தளத்தில் 34 மடங்கள் மற்றும் கோவில்கள் உள்ளன. அவற்றில் 12 பௌத்த மதம், 17 இந்து மதம் மற்றும் ஐந்து சமண சமயத்தைச் சேர்ந்தவை.

(Photograph:Twitter)

கேட்வே ஆஃப் இந்தியா, மும்பை அரபிக்கடலின் ​​நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள கேட்வே ஆஃப் இந்தியா, 26 மீட்டர் உயரம் கொண்டது. மும்பையில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலமாக இது கருதப்படுகிறது.  (Photograph:Twitter)

அமீர் கோட்டை, ஜெய்ப்பூர் 1592 இல் கோட்டை அரண்மனையாக கட்டப்பட்டது, மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தக்  கோட்டையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. (Photograph:Twitter)

செங்கோட்டை, டெல்லி 1648 இல் முகலாய பேரரசர் ஷாஜஹானால் செங்கோட்டை கட்டப்பட்டது. பிரமிக்க வைக்கும் சிவப்பு பளிங்குகளை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், இரண்டு கிலோமீட்டர்களுக்கு மேல் விரவியுள்ளது. லாகூர் கேட் மற்றும் டெல்லி கேட் என இரண்டு பெரிய வாயில்களைக் கொண்டுள்ளது. (Photograph:Twitter)

 

தாஜ்மஹால்  உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள தாஜ்மஹால், வளைவுகள், தூபிகள் மற்றும் குவிமாடங்கள் உட்பட இஸ்லாமிய வடிவமைப்பின் பல கூறுகளின் கலவையாகும். யமுனை நதியின் கரையில் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள நினைவுச்சின்னம் இது. (Photograph:Twitter)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link