Mountain Warriors: ராணுவம், நட்பு நாடுகளின் படைகள் இமயமலையில் பயிற்சி
இமயமலையின் பனிப்பாறை நிலப்பரப்பில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இங்கு 4 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நான்கு பயிற்சிகளையும் முடித்தவர்கள் மவுண்டன் வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்
கடுங்குளிர், பனிப்புயல் எதையும் பொருட்படுத்தாமல் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், நட்பு நாடுகளின் ராணுவத்தினர் என பெரும்பாலான ஜவான்களுக்கு இமயமலையில் பயிற்சியளிக்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இந்திய ராணுவமும் துணை ராணுவமும் பயிற்சி மேற்கொள்கின்றன.