IPL 2024: சென்னை வந்த தல... ஓப்பனிங்கில் இறங்குகிறாரா தோனி - புதிய பிளான் என்ன?

Wed, 06 Mar 2024-1:49 am,

17ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது. 

 

முதல் 21 போட்டிகள் அடங்கிய முதல்கட்ட அட்டவணை மட்டுமே தற்போது ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மீதம் உள்ள போட்டிகளின் அட்டவணைகளும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

 

அந்த வகையில், நடப்பு சாம்பியன் சென்னை அணி முதல் 21 போட்டிகளில் 4 போட்டிகளை விளையாட உள்ளது. அதில் உள்ளூர் சென்னையில் 2 போட்டியும், ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் தலா 1 போட்டியும் நடைபெறுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சேப்பாக்கம் மைதானத்தில், பயிற்சியாளர்கள் மத்தியில் தீவிர பயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், முகேஷ் சௌத்ரி உள்ளிட்ட வீரர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் உள்பட பலர் இறுதிக்கட்டத்தில் அணியுடன் இணைவார்கள். 

 

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி செவ்வாய்கிழமை (மார்ச் 5) தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அவர் தனது அணி வீரர்களை சந்திக்கச் சென்றார். அணி நிர்வாகம் அவரை வரேவற்றது. 

 

தோனி நாளை முதல் பயிற்சியை தொடங்குவார் என கூறப்படும் நிலையில், அவர் நேற்று தனது முகநூல் பதிவில் புதிய சீசனையும், புதிய பொறுப்பையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பதிவிட்டிருந்தார். இதன்மூலம், தோனி ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஒப்பனிங்கில் இறங்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

 

டேவான் கான்வே காயம் காரணமாக தொடரின் முதல் கட்டத்தில் இருந்து விலகிய நிலையில், ஓப்பனிங்கில் ருதுராஜ் உடன் யார் களமிறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இதில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவும் ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்புள்ளது. அவரை 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link