IPL 2025: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடினால் சம்பளம் இவ்வளவு தானா?
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான புதிய விதிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அன்கேப்ட் வீரர் என்ற விதியை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகிவில்லை.
இந்த மாத இறுதியில் தோனியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தோனியை அன் கேப்ட் பிளேயராக எடுத்தால் ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துக்கொள்ளலாம்.
தற்போது தோனி அமெரிக்க பயணத்தில் இருக்கிறார் என்றும், இந்தியா வந்ததும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் சிஎஸ்கே தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், இதில் அதிகபட்சமாக ஐந்து இந்திய & வெளிநாடு வீரர்களையும், இரண்டு கேப் செய்யப்படாத வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.
தோனியை தவிர சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோரை தக்க வைத்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.