உலகின் முதல் 10 பில்லியனர்களின் பட்டியல் & அவர்களின் சொத்து மதிப்பு..!
ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்பவர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 187 பில்லியன் டாலர்கள் ($187B).
வில்லியம் ஹென்றி கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 121 பில்லியன் டாலர்கள் ($121B).
மார்க் எலியட் சுக்கர்பெர்க் ஒரு அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 102 பில்லியன் டாலர்கள் ($102B).
முகேஷ் அம்பானி ஒரு இந்திய தொழில் அதிபர் ஆவார். இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்) பதவிகளை வகிப்பவரும் ஆவார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.6 பில்லியன் டாலர்கள் ($80.6B).
பெர்னார்ட் ஜீன் எட்டியென் அர்னால்ட் ஒரு பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் கலை சேகரிப்பாளர் ஆவார்.உலகின் மிகப்பெரிய சொகுசு பொருட்கள் நிறுவனமான LVMH மொயட் ஹென்னெஸி - லூயிஸ் உய்ட்டன் SE-யின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஆவார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.2 பில்லியன் டாலர்கள் ($80.2B).
வாரன் எட்வர்ட் பஃபெட் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.2 பில்லியன் டாலர்கள் ($79.2B).
ஸ்டீவ் அந்தோனி பால்மர் எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.2 பில்லியன் டாலர்கள் ($76.4B).
லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.2 பில்லியன் டாலர்கள் ($71.3B).
செர்ஜே மிகலாயோவிச் பிரின் கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. செர்ஜே பிரின் கூகுள் என்னும் நிறுவனத்தை லாரி பேஜ் என்பவருடன் இணைந்து தொடங்கினார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.2 பில்லியன் டாலர்கள் ($69.1B).
எலோன் ரீவ் மஸ்க் FRS ஒரு பொறியாளர், தொழில்துறை வடிவமைப்பாளர், தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் பரோபகாரர் ஆவார். அவர் SpaceX நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை வடிவமைப்பாளர், ஆரம்பகால முதலீட்டாளர். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 80.2 பில்லியன் டாலர்கள் ($68.7B).