சென்னை சூப்பர் கிங்ஸ் கொடுத்த ஆபர்! வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த அனிருத்!
கோலிவுட்டின் நம்பர் ஒன் மியூசிக் டைரக்டராக உள்ளார் அனிருத். கமல், ரஜினி, விஜய், அஜித் என சீனியர் நடிகர்களின் படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.
மேலும் தற்போது கோலிவுட்டை தாண்டி பாலிவுட், டோலிவுட் என மற்ற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் அனிருத். மேலும் அதிக சம்பளம் ஆகும் இசையமைப்பாளராகவும் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்காக ஒரு புதிய தீம் மியூசிக் வேண்டும் என்று அனிருத்திடம் கேட்டுள்ளது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார், அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை அணி ஐபிஎல் விளையாட வந்தது. அந்த சமயத்தில் புதிய தீம் மியூசிக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சென்னை அணி அனிருத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் சென்னை அணியின் பழைய தீம் மியூசிக் ஆனா விசில் போடு தீம் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்றும், அதனை முறியடித்து தன்னால் வேறு தீம் மியூசிக் போட முடியாது என்று அந்த ஆபரே மறுத்துள்ளார் அனிருத்.